மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தபோதும் விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிக்கவுள்ளதாக மின்சார சபையின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றிபெற வேண்டும் எனவும் இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருளில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.