• Fri. Apr 19th, 2024

உலகை அதிரவைத்த இரட்டை கோபுர தாக்குதல்; நினைவுகூரும் அமெரிக்கா

Sep 11, 2021

செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 20வது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல்பெண்மணி பில் பைடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வில் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களிற்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலாவது விமானம் தாக்கிய 8.46 மணிக்கு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தங்கள் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றதன் பின்னர் உறவினர்கள் தங்கள் உறவுகளின் பெயர்களை வாசித்தனர்.