• Sun. Dec 8th, 2024

பிரபல நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடி

Feb 28, 2022

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்றும் 5ஆவது நாளாக அங்கு இரு நாட்டு இராணுவத்தினர் இடையே தாக்குதல் நடந்து வருகிறது.

உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா – கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைனின் தேசியக் கொடியின் நீலம், மஞ்சள் நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நீர்வீழ்ச்சியில் அந்த நிறங்கள் ஒற்றுமையைக் குறிக்கும் வகையிலும் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஒளிர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.