• Tue. Mar 26th, 2024

கனடாவில் தோண்ட தோண்ட குழந்தைகளின் உடல்கள்

Jun 2, 2021

கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன.

இறந்த பூர்வக்குடியின குழந்தைகள் நினைவாக கனடாவில் ஆங்காங்கு சிறுவர் சிறுமியர் அணியும் காலணிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

சட்டமன்றங்களில் கனடா தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகின்றன. ட்ரான்ஸ் கனடா நெடுஞ்சாலையில் 215 டெடி பியர் வகை கரடி பொம்மைகள் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளன. தற்போது, Hillhurst United church என்ற தேவாலயத்தில் நேற்று மதியம் சரியாக 2.15 மணிக்கு 215 முறை தேவாலய மணி ஒலிக்கச் செய்யப்பட்டது.

ஏழு நிமிடங்கள் முழங்கிய அந்த மணியோசை ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும் உயிரிழந்த ஒரு குழந்தையை நினைவு கூர்வதற்காக ஒலிக்கச் செய்யப்பட்டது.

Kamloops என்ற இடத்தில் அமைந்துள்ள உண்டுறை பள்ளியில் சடகங்களாக கண்டுபிடிக்கப்பட்ட 215 குழந்தைகளின் நினைவாக அந்த தேவாலய மணி ஒலிக்கச் செய்யப்பட்டது.