• Sat. Oct 12th, 2024

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி கட்டாயம்: சட்டத்தை கொண்டுவந்த நாடு

Feb 1, 2022

மக்களின் எதிர்ப்புக்கு இடையே ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்தது.

ஆஸ்திரியாவின் 72 சதவீதம் பேருக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், உடம்பில் எந்த மருந்தை ஏற்ற வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமே தவிர, ஆட்சியாளர்களின் விருப்பமாக இருக்க முடியாது என ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த சட்டம் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 600 யூரோ முதல் 3 ஆயிரத்து 600 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும்.

எனினும் கர்ப்பிணிகள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ காரணங்களால் சிகிச்சை பெறுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றியது ஆஸ்திரியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.