தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையின் தமிழகத்திற்கு கூடுதலாக 6.72 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 2.05 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் என்றும், 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6.72 லட்சம் தடுப்பூசிகள் வந்த பிறகு அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என்று மாநில அரசு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.