தமிழகத்தில் நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி,உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது.
ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின.
ஜனவரி 1ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அன்னபூரணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அன்னபூரணி பேட்டி அளித்திருந்தார்.
அதில், இங்கே நிறைய பேர் புரளிகளை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். நான் எங்கு ஓடி ஒளியவில்லை. நான் இங்கு தான் இருப்பேன்.
ஆன்மிகம் என்பது சொன்னால் புரிய கூடிய விஷயம் இல்லை. 2009 ஆம் ஆண்டு எனது கணவர் அரசுவுடன் திருமணம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தேன்.
நான் சொல்ல வருவதை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்றார். அப்போது ஆன்மீக வாழ்விற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கொந்தளித்த அன்னபூரணி, கோபமடைந்து என்னை சாதாரண நினைத்துவிட்டீர்கள். இல்லை என்னை பற்றி உங்களுக்கு புரியவில்லை என கோபமாக கத்தியதில் அவருக்கு மூச்சு வாங்கியது.
பின்னர் தண்ணீரை குடித்த அன்னபூரணி அரசு பேட்டியை தொடர்ந்தார். அவர் மேலும் கூறுகையில் நான் எந்த தவறையும் செய்யவில்லை.
என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இந்த முகவரியை கொடுத்து போலீஸுக்கு போன் செய்யுங்கள் என்றார்