• Thu. Oct 31st, 2024

இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அங்கீகாரம்!

Nov 2, 2021

இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி, சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டினருக்கான பயணக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா அரசாங்கம் தளர்த்தியுள்ள நிலையில், டிஜிஏ-வின் இந்த தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.