• Thu. Dec 5th, 2024

பீரங்கி குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் பிபின் ராவத்தின் உடல் தகனம்!

Dec 10, 2021

இந்திய முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் டெல்லி காண்ட்டோன்ட் பகுதியில் சகல இராணுவ மரியாதியுடன் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

இதன்போது பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், 17 குண்டுகள் முழங்க இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவதின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு டெல்லியில் உள்ள காண்ட்டோன்ட் மயானத்தில் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் பின்னர் குண்டுகள் முழுங்க அவர்களுடைய உடல்கள் தகனம் செய்யப்பட்டன.