• Tue. Jan 14th, 2025

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைக்கும் கருப்பு பூஞ்சை தொற்று

Jun 6, 2021

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு(Steroids) எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் இலகுவாகத் தாக்கி வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 2ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 518 ஆக இருந்தது.

சிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.