• Thu. Feb 13th, 2025

மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை!

Dec 20, 2021

மாநிலங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழக அரசு இப்போது ஐந்து இலட்சம் கோடி கடனில் உள்ளது. அந்த நிதி நிலையைக் சரி செய்தாக வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா என்ற கொடி தொற்று நோய் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அதிகமாகப் பாதித்தது. அந்த தொழில்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர போராடி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.