• Wed. Oct 30th, 2024

கறுப்பாக மாறிய சென்னை மெரினா!

Nov 12, 2021

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கழிவுப் பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டி கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கும் மேலும் மழையும் மெல்ல மெல்ல குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னை மெரினா கடலில் கழிவுநீர் கலந்து, கடல் நீர் கருப்பாக மாறியுள்ளது. இதனால் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கழிவுப் பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் நீரின் அடர்த்தி அதிக அளவில் உள்ளது. கனமழையில் அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் மெரினா கடலில் கலந்துள்ளதால் இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.