• Sun. Dec 8th, 2024

இந்தியாவில் புதிதாக 5000 பேருக்கு கொரோனா

Dec 14, 2021

இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3கோடியே 47 இலட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்து 38 ஆயிரத்து 763 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் 252 பேர் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 75 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 88 ஆயிரத்து 993 பேர், பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.