ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் – இ -தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
என்கவுண்டர் நடைபெற்று வரும் பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.