• Fri. Mar 21st, 2025

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Nov 3, 2021

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் சென்னை வானிலை மையம் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.