• Thu. Mar 20th, 2025

இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டும்

Dec 23, 2021

கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான தேசிய குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா பாதிப்பு புதிய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இந்த பாதிப்பு ஏற்கனவே உள்ள உலக நடைமுறைகளை முழுமையாக மாற்றியுள்ளது. எனவே கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் புதிய உலக நடைமுறை உருவெடுக்க உள்ளது.

இளைஞர்களுக்கு நாம் எதனை கற்பிக்க இருக்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில் நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்கள் தான் மிகப் பெரிய பங்களிப்பை செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.