• Fri. Dec 6th, 2024

உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா

Mar 10, 2022

இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார்.

இதன்படி உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் ருமேனியா சென்றடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகாரெஸ்ட் விமான நிலையம் வந்தடைந்த உதவிப் பொருட்களை ருமேனிய அதிகாரிகளிடம் வழங்கவுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.