• Sun. Feb 16th, 2025

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்

Mar 8, 2022

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (07) தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற ஆக்கபூர்வமான மற்றும் சுமுகமான கலந்துரையாடல் பலனளித்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார் என்றும் அறிவித்துள்ளது.

அத்தோடு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.