
கடந்த புதன்கிழமை , இந்தியா சார்பில் ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது.
இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவானது. இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வழக்கான பரிசோதனை செய்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில்,’ பாகிஸ்தான் பகுதிக்குள் ஏவுகணை தரையிறங்கியது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.