• Fri. Feb 14th, 2025

எல்லைப் பகுதிகளில் இனிப்புகளை பரிமாறிய இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர்

Jan 1, 2022

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நான்கு இடங்களில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக இரு நாடுகளும் நல்லுறவை மேம்படுத்த பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால், எல்லையோர கிராமப்புறங்களில் அமைதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக, இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், சுதந்திர நாள் உள்ளிட்ட நாள்களில், இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் இருநாட்டு ராணுவமும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.