• Mon. Nov 4th, 2024

தீபாவளிக்கு மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Nov 1, 2021

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.,05) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, நவம்பர் 05 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.,05 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.,20 அன்று பணிநாளாக அறிவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.