
பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவிற்கு வருகை தந்தவுடன் ஒருமுறையும் எட்டாவது நாளில் ஒரு தடவையும் பி.சி.ஆர் பரிசோதனையை அவர்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.