• Tue. Nov 28th, 2023

வரியை உயர்த்தி வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை – நிர்மலா சீதாராமன்

Feb 1, 2022

இந்தியாவில் மோடி அரசாங்கம் நடப்பு ஆண்டிலும்,கடந்த ஆண்டிலும் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு வரி விதிப்பு பெரும் சுமையாக அமைந்து விடக் கூடாது என்று பிரதமர் தங்களிடம் அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார்.

டிஜிட்டல் சொத்துக்கள் மீதான வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதிக்ககப்பட உள்ள நிலையில், அதற்கான வரையரை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறினார்.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், இரண்டு இலக்கத்தில் பணவீக்கம் உயர்வதற்கு தங்களது அரசு அனுமதிக்காது என்றும் நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.