• Tue. Sep 10th, 2024

ஒமைக்ரான் பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

Dec 23, 2021

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன.

ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த வைரஸ் தற்போது 269 பேருக்கு பாதித்துள்ளது.

டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் தற்போது முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் 300-ஐ நெருங்கி வரும் நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், பூஸ்டர் டோஸ், ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா? பொது இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்தல் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.