• Sat. Apr 13th, 2024

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு- தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி..!

Feb 15, 2022

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர்.

இதன்போது அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

ஆனால் அவர்களை கல்லூரி வளாகத்தின் வெளியே முதல்வர் மாணவிகளை தடுத்து நிறுத்தினார்.

அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர்.

இந்த விவகாரத்தில் கடந்த 8 ஆம் திகதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் இன்று ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை நீக்கிய பிறகே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

சில இடங்களில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. ஷிவ்மோகாவில் உள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஹிஜாப்பை அகற்றினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கூறியதால், தேர்வு எழுதாமல் வீட்டிற்கே திரும்பிச்சென்றதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.