ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அந்தத் தாக்குதல்களின் போது இந்திய இராணுவம் உரிய பதிலடி அளித்தது. இதனால் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு இராணுவ நிலைகளுக்கும் கணிசமாக சேதம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிராஜ் 2000 ரக விமானம் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் ஏழு விமானங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.