• Sun. Feb 16th, 2025

இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி

Mar 8, 2022

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை அடுத்து சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கபட்டது , கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் இணைந்து பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி வருகிற மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது