தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து கவர்னரே முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
இதனால் இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டு நல்ல முடிவு கொடுக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.
7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என கூறினார்.
இதனிடையே அமைச்சருடன் சிறைசாலைக்குள் தி.மு.க நிர்வாகிகள் சிலர் சென்றதால் இந்த சம்பவம் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.