• Fri. Mar 21st, 2025

ஒரே நாளில் பங்குச்சந்தையில் உயர்ந்த டாடா நிறுவனத்தின் பங்குகள்

Oct 14, 2021

டாடா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்ததில் இருந்தே பொதுமக்கள் மத்தியில் நிறுவனத்திற்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து டாட்டாவின் பங்குகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில் டாடா நிறுவனத்தின் பங்குகளின் விலை ஒரே நாளில் அதிரடியாக சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பங்குச் சந்தையில் டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இது டாடாவின் மரியாதை கிடைத்த பரிசு என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மூடப்படும் கார் நிறுவனத்தையும் டாடா நிறுவனம் வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதால் தமிழக மக்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.