• Mon. May 29th, 2023

உக்ரைனில் இருந்து 219 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்த முதல் விமானம்

Feb 26, 2022

ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது.

உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானங்களையும் இயக்குகிறது.

அந்த வகையில், இன்று அதிகாலை 3.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை காலை 10 மணியளவில் புகாரெஸ்ட் நகரத்தில் தரையிறங்கியது

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பை புறப்பட்டது.

இன்று இரவு 9 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு 8 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.