• Mon. Sep 9th, 2024

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா இல்லை!

Jun 16, 2021

தமிழ்நாட்டின் கொரோனா பற்றி விளக்கம் கொடுக்கையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை பிரித்துக் கொடுத்து மாவட்ட வாரியாக விநியோகித்து வருகிறோம்.

எனவே இனிமேல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதோடு கொரோனா இறப்புகளை நாங்கள் மறைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

உதாரணமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் மறைந்த எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் மருத்துவமனையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருந்தது.

ஆனால், அவர்கள் இறந்தபோது நெகட்டிவ் என ரிசல்ட் காட்டியது. எனவே அவர்களுக்கு நெகட்டிவ் சான்றிதழ்கள் தான் வழங்கப்பட்டன.

எனவே அரசு கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை , ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்படி இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.