• Tue. Nov 5th, 2024

காந்தி பிறந்தநாளில் கதர் ஆடைகளை அணிவோம் ; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Oct 1, 2021

இந்தியா முழுவதும் நாளை (2-ந்தேதி) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம்.

தமிழகத்தில் உள்ள கதரங்காடிகள் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்கப்படுகிறது.

அந்நியர் ஆதிக்கத்திற்காக காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது என பதிவிட்டுள்ளார்.