ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.10) ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.
ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் திகதி வரை தொடரும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.