• Tue. Sep 10th, 2024

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 190 பேர் பலி!

Aug 24, 2021

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

113 ஆண்களும் 77 பெண்களுமே உயிரிழந்துள்ளதுடன் , 60 வயதுக்கு மேற்பட்ட 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 38 பேர் மரணித்துள்ள 30 வயதுக்குட்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,750 பேர் உயிரிழந்துள்ளனர்.