புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதுள்ளனர் .
இவர்களில் இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.
கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .