• Mon. Dec 2nd, 2024

கொரோனா தொற்றாளர்களுடன் சென்ற வான் விபத்து!

Dec 27, 2021

கொரோனா தொற்றாளர்களை தனியார் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற ​சொகுசு வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் இந்த வான் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 70 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்துக்குள்ளான வானில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருப்பதை தெரிந்துகொண்ட பிரதேச மக்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயக்கம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வான் பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு 7 கொரோனா தொற்றாளர்களை ஏற்றிவந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.