• Tue. Sep 10th, 2024

மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை விடுத்த அறிவிப்பு

Feb 25, 2022

இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளைய தினம் (26) ஏ.பீ.சி குழுக்களுக்கு பகல் நேர மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில் அது 3 மணித்தியாலங்காக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஏனைய குழுக்களுக்கு இரண்டரை மணித்தியாலங்கள் குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 27 ஆம் திகதி ஏ.பீ.சி குழுக்களை தவிர ஏனைய குழுக்களுக்கு எவ்வித மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படாது எனவும், ஏ,பீ.சி குழுக்களுக்கு இரண்டரை மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் 26 மற்றும் 27 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு தொடர்பான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.