• Thu. Jan 26th, 2023

கொழும்பில் இன்று அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்!

Jan 10, 2022

கொழும்பில் இன்று மாத்திரம் இதுவைரையில் மூன்று மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முற்பகல் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து , கொலன்னாவ பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் உள்ள எண்ணெய் கால்வாயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் , மீட்கப்பட்ட குறித்த முன்று சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பில் ஒரேநாளில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.