
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சீன உர கப்பல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.