• Mon. Nov 4th, 2024

இலங்கையில் தொடரும் தட்டுப்பாடு – விலையுயர்ந்த சீனி

Oct 26, 2021

இலங்கையில் பல பகுதிகளில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் தலைவிரித்தாடுகிறது.

அங்கு தேவைப்படும் சீனி தற்போது களஞ்சியசாலைகளில் முற்றுப்பெற்றிருப்பதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தட்டுப்பாட்டை போக்குவது பற்றி நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலக்கியவண்ணவுக்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையே நாளை(27) விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் சில இடங்களில் ஒரு கிலோ வெள்ளை சீனி 170 ரூபா வரை விற்பனையாகின்றது