• Wed. Nov 29th, 2023

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!

Aug 11, 2021

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர்நாயகமாகிய விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(11) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்தோடு இதுவரை 19 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறினார்.