• Mon. Oct 2nd, 2023

இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா!

Jul 27, 2021

இலங்கையில் 503 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 1,185 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட, இன்று இதுவரையில் 1,688 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 299,874 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு பதிவாகி வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகளவிலான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர்.

அத்துடன் , நாட்டில் நேற்று (26) கோவிட் தொற்றால் 48 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.