
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபீட் என்டிஜன் பரிசோதனையில் கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது மாணவி சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.