இலங்கையில் நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தனவினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய இது வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் எவ்வாறு பொது மக்கள் ஈடுபடுவது என்பது குறித்த வழிகாட்டல்கள் இதில் அடங்கும்.
அதற்கமைய, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலும், ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.