• Thu. Jan 2nd, 2025

இலங்கையில் நீக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்

Oct 1, 2021

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(01) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுலாக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று முதல் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.