• Thu. Apr 24th, 2025

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

Apr 2, 2022

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு பொது ஒழுங்கு, பாதுகாப்பு, மற்றும் அத்தியாவசிய விநியோகங்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.