• Tue. Sep 10th, 2024

இலங்கை சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

Dec 11, 2021

பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் படகில் பயணித்த வெளிநாட்டு சந்தேகநபர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இலங்கையிலிருந்து 900 கடல் மைல் தொலைவில் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருளை ஏற்றிச் சென்ற வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலும், படகில் இருந்த ஆறு வெளிநாட்டு சந்தேக நபர்களும் இலங்கை கடற்படைக் கப்பலின் பாதுகாப்பில் கரைக்குக் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.