• Mon. Jun 5th, 2023

இலங்கையில் உச்சம் தொட்ட எரிபொருள் விலை

Mar 12, 2022

இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பெற்றோல் ஒரு லீற்றருக்கு 77 ரூபாயினாலும், டீசல் லீற்றருக்கு 55 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் 254 ரூபாயாகவும், ஒரு லீற்றர் டீசல் 176 ரூபாயாகவும் உயர்ந்திருக்கின்றது.

மேலும் 95 ஒக்ரைன் பெற்றோல் ஒரு லீற்றர் 284 ரூபாயாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 254 ரூபாயாகவும் உயர்ந்திருக்கின்றது.

இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளது.