• Wed. Aug 17th, 2022

அமெரிக்கா விரைந்தார் கோட்டாபய!

Sep 18, 2021

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கிப் பயணமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும்- 21 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. மறுநாளான எதிர்வரும்- 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளதுடன் நாடு கடந்து சர்வதேச கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.