• Thu. Dec 7th, 2023

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Feb 16, 2022

இலங்கைக்கு இந்த ஆண்டின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 39 ஆயிரத்து 621 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

அதன்படி, அன்றைய தினத்தில் 4 ஆயிரத்து 677 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நாள் ஒன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பதிவானது.

அதன்படி, குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 829 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.